பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவும் நிலைமை உருவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு அறிவித்துள்ளதாகவும் குறித்த பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதன்படி, அனைத்து மருத்துவ அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டுமெனவும் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
அதன் பின்னர் எடுக்கப்படும் தீர்மானங்களை உடனடியாக எடுக்க வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதி செயலாளர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்கள் மத்தியில் தொற்றுநோய் பரவி வருவதால், இந்நோய் மேலும் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஏற்கனவே பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.