Our Feeds


Friday, November 26, 2021

SHAHNI RAMEES

யுகதனவி விவகாரம் – விசாரிக்க ஐவரடங்கிய நீதியரசகர்கள் குழாம் நியமனம்

 

கெரவலப்பிட்டி, யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தில் அரசுக்கு சொந்தமான பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவது மற்றும் எரிவாயு விநியோக

ஏகபோக உரிமையை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தை ரத்து செய்யக் கோரிய அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலிக்க ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாமொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் நீதியரசர்களான முர்து பெர்னாண்டோ, காமினி அமரசேகர மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று (26) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனெக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.ரீ.ரீ.ஈ தெஹிதெனிய ஆகிய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது

.
இந்த மனுக்களில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள் சார்பில் சட்டமா அதிபர் ஆஜராகியிருந்த போதிலும், அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் சார்பில் தனிப்பட்ட சட்டத்தரணி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »