அவுஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக்கிண்ண T 20 போட்டியில் விளையாடுவதற்கு ஆப்கானிஸ்தானும், பங்களாதேஷும் நேரடியாகத்தகுதி பெற்றுள்ளன. இலங்கையும், மேற்கு இந்தியத் தீவுகளும் தகுதிச் சுற்றி விளையாட வேன்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசியின் இந்த அறிவிப்புக்கு விமர்சகர்கள் முன்வைக்கப்படுவதுடன், ரசிகர்களும் கடும் கண்டனங்களுடன் தமது எதிர்ப்பைத் தெரிவிகின்றனர்.
2021 ஆம் ஆண்டு T 20 உலகக் கிண்ண சம்பியனும், ரசன்னரும் நேரடியாகத் தகுதி பெறுகின்றன. ஐசிசி தரவரிசையில் அடுத்து 6 இடங்களில் இருக்கும் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா ஆகியவை நேரடியாக சூப்பர்-12 சுற்றுக்குத் தகுதி பெறும்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வி கண்ட மேற்கு இந்தியா ஐசிசி ரி20 தரவரிசையில் 10ம் இடத்துக்கு சரிந்தது. இலங்கை அணி 9ஆம் இடத்தில் உள்ளது. இலங்கை அணி ஏற்கனவே இந்த தொடரிலேயே தகுதிச் சுற்றில் ஆடித்தான் தகுதி பெற்றது. T 20 உலகக்கிண்ணத் தொடரில் விளையாடிய ஐந்து போட்டிகளிலும் தோல்வியடைந்த பங்களாதேஷ் தர வரிசையில் 8ம் இடத்தில் இருப்பதால் நேரடியாக சூப்பர் 12-க்குத் தகுதி பெற்றது. சொந்த நாட்டு குழிப்பிட்சில் அவுஸ்திரேலியாவையும், நியூசிலாந்தையும் வீழ்த்தியதால் தரவரிசையில் முந்தியது.
இரண்டு முறை T 20 சம்பியனான மேற்கு இந்தியத் தீவுகள் தகுதிச் சுற்றில் விளையாட வேண்டும். ஆனால் சொத்தை அணியான பங்களாதேஷ் நேரடியாகத் தகுதி பெறுகிறது. இதுதான் ஐசிசி தரவரிசையின் இலட்சணம். இலங்கை,மேற்கு இந்தியா ஆகியவற்றிடம் தோற்ற பங்கலாதேஷ் நேரடியாகத தகுதி பெறுகிறது. நன்றாக ஆடிய இலங்கை மீண்டும் தகுதிச் சுற்று ஆட வேண்டுமாம். கிறிக்கெற்
ஐசிசி தரவரிசை நிச்சயம் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டிய ஒன்றே. ஏனெனில் அனைத்துப் போட்டிகளிலும் தோற்ற பங்களாதேஷ் நேரடித் தகுதி பெற , பங்கலாதேஷைப் பந்தாடிய மேற்கு இந்திய , இலங்கை அணிகள் தகுதிச் சுற்று ஆடி தகுதி பெற வேண்டுமாம். யாராவது சொல்லி தீர்ப்பை மாத்துங்கப்பா என் மீம்ஸ்கள் வெளியாகியுள்ளன.