இன்றைய தொழில்நுட்ப உலகில் ஒவ்வொரு நாளும் விண்வெளி சார்ந்த ஆராய்ச்சி மற்றும் ஆய்வு பணிகளுக்காக உலக நாடுகள் நேரத்தையும், பொருளையும் செலவிட்டு வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. அதில் ஒரு முயற்சி தான் நிலவில் ஆக்ஸிஜன் இருப்பது தொடர்பான ஆராய்ச்சி.
இந்த தகவல் நம்பமுடியாத ஒரு ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. அந்த ஆய்வில் நிலவில் மேற்பரப்பில் 800 கோடி மனிதர்கள் 1 லட்சம் ஆண்டுகள் வாழ தேவையான ஆக்ஸிஜன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஆக்ஸிஜன் நிலவின் ‘ரெகோலித்’-தில் (நிலவின் மேற்பரப்பில் உள்ளடங்கியுள்ள பாறை மற்றும் தூசு அடுக்குகள்) இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆக்ஸிஜன் வாயு வடிவில் நிலவில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்காக கடந்த அக்டோபரில் ஆஸ்திரேலிய விண்வெளி முகமையும், அமெரிக்காவின் நாசாவும் இணைந்து ரோவார் ஒன்றை நிலவுக்கு அனுப்பி உள்ளன. அதன் மூலம் அங்கு இருக்கும் பாறைகளை சேகரித்துக் கொண்டு வந்து, அதை மனிதன் சுவாசிக்க கூடிய ஆக்ஸிஜனாக மாற்றுவது எப்படி என்ற ஆய்வு நடக்க உள்ளது.