இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பக்லேயிற்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தூதுக்குழுவிற்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று கடந்த வெள்ளிக்கிழமை (12) கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் காரியாலயத்தில் இடம்பெற்றது.
ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் உப தலைவர்களில் ஒருவரான அஷ்-ஷைக் எஸ்.எச். ஆதம்பாவா, உதவிச் செயலாளர்களில் ஒருவரான அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம் மற்றும் சமூக சேவைப் பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் கே.எம். முக்ஸித் அஹ்மத் ஆகியோர் ஜம்இய்யாவின் சார்பில் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இதன்போது இந்தியாவுடனான எமது உறவு பற்றியும், கல்வி மற்றும் இனங்களுக்கிடையில் சகவாழ்வை கட்டியெழுப்புதல் போன்ற விடயங்களில் எதிர்கால கூட்டு முயற்சிகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகரின் அழைப்பின் பேரிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது. இலங்கைக்கான பிரதி இந்திய உயர் ஸ்தானிகர் வினோத் கே. ஜகொபும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்.