சுகாதார சேவைப் பிரிவைச் சேர்ந்த 50 ஆயிரம் வரையிலான தொழில் நிபுணர்களின் பங்கேட்புடன் நாளை (09) அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளனா்.
நாளைய தினத்திலிருந்து நாளை மறுதினம் (10) காலை 7.00 மணி வரை இந்த அடையாள வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக வைத்திய தொழில் நிபுணர்களின் ஒன்றிணைந்த செயற்பாட்டு குழுவின் தலைவர் மற்றும் சுகாதார தொழில் நிபுணர்களின் சம்மேளனத்தின் ஒழுங்கிணைப்பாளாா் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளாா்.
6 வகையான முக்கிய கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்காமை, வைத்திய துறையில் இல்லாத ஏனைய சுகாதார தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் செயற்படுதல் ஆகிய விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் 15 சுகாதார துறைசார் தொழிற்சங்கங்கள் பங்குகொள்ளவுள்ளதுடன் புற்றுநோய் வைத்தியசாலை, சிறுவர் வைத்தியசாலை , மகப்பேற்று மருத்துவமனை மற்றும் கொரோனா வைத்தியசாலை ஆகியவற்றில் இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படாது என்பதுடன் அவசர, அத்தியாவசிய சேவைகளை முறையாக வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.