கிழக்கு ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஸ்பின் கர் பகுதியில் அமைந்துள்ள மசூதியொன்றில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இதனால் குடியிருப்பாளர்களும் தலிபான் அதிகாரி ஒருவரும் சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக சர்வசே ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பெயர் குறிப்பிட விரும்பாத தலிபான் அதிகாரி ஒருவர் AFP செய்தி நிறுவனத்தினடம் வெடி வெடிப்பு இடம்பெற்றதை உறுதிபடுத்தினார்.
உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1:30 மணியளவில் மசூதியின் உட்புறத்தில் இருந்த வெடிபொருட்கள் வெடித்தபோது வெடிப்பு நிகழ்ந்ததாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறியுள்ளனர்.
நவம்பர் 2 ஆம் திகதி, மத்திய காபூலில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்ற வெடி விபத்து மற்றும் துப்பாக்கி பிரயோகங்களினால் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டதுடன், குறைந்தது 50 பேர் காயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.