எதிர்கால எரிசக்தி அமைச்சராக நியமிக்கப்படவுள்ள இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவுக்கு தனது மனதார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தொடர்பில் தான் வெளியிட்ட கருத்து உண்மையானது என்பதை பொறுப்புடன் தெரிவிப்பதாகவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.
தற்போதைய அரசாங்கமே வரலாற்றில் ஊழல் மிகுந்த அரசாங்க மாறியுள்ளதாக அமைச்சர் கம்மன்பில வெளியிட்ட கருத்துக்கு இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க கருத்து வெளியிட்டிருந்தார்.
இது குறித்து கருத்து வெளியிடும் போதே அமைச்சர் உதய கம்மன்பில இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சுப் பதவியை வகித்துக்கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பதை விடுத்து, அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் எனவும் இந்த அரசாங்கம் ஊழல் அரசாங்கமென்றால் ஏன் இன்னும் அமைச்சுப் பதவியில் கம்மன்பில இருக்கிறார் என்றும் செஹான் சேமசிங்க கேள்வி எழுப்பியிருந்தார்.
அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் கொழும்பில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தியதன் பின்னர் கஹட்டகஸ்திகிலிய பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.