சீரற்ற வானிலை காரணமாக ரயில் மார்க்கத்தில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ள கொழும்பு – கண்டி ரயில்
சேவைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.மழை காரணமாக மலையக ரயில் பாதையில் சில இடங்கள் தாழிறங்கியிருந்தன. பதுளையிலிருந்து நானுஓயா வரையில் பல இடங்களில் இவ்வாறான நிலை ஏற்பட்டிருந்ததாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.
அவை தற்போது சீரமைக்கப்பட்டுள்ளன. இறம்புக்கனை ரெயில் நிலையத்தில் தண்டவாளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு சீர் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக இன்று தொடக்கம் ரயில் சேவையை மேற்கொள்ள முடியும் என்று பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர கூறினார்.