Our Feeds


Saturday, November 13, 2021

SHAHNI RAMEES

மதுபோதையில் மாமியாரைத் தாக்கிய மருமகன் கைது!

 

மாமியாரைத் தாக்கிய மருமகன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை, கோமரங்கடவல – அடம்பன பகுதியைச் சேர்ந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது;

ஒரே வீட்டில் மாமி மற்றும் அவரது மனைவி, பிள்ளைகள் வசித்து வந்துள்ளனர்.

நேற்றிரவு மதுபோதையில் வந்து மனைவியை தாக்கிய போது மாமியார் குறுக்கே வந்து மருமகனை தாக்குவதற்கு முற்பட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மருமகன் தனது மாமியாரை தடியால், தாக்கியதில், தாக்குதலுக்கு உள்ளான மாமியார் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து மருமகன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த நபரை திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »