இந்த நூற்றாண்டின் நீண்ட நேர சந்திர கிரகணம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மிகத்தெளிவாக காணப்பட்டது.
சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அப்போது, சந்திரனின் மீது பூமியின் நிழல் படிந்து, அதை மறைக்கும்.
இந்நிலையில், இந்த நூற்றாண்டின் மிக நீண்ட நேர சந்திர கிரகணம் நேற்று முன்தினம் இரவு காணப்பட்டது. 580 ஆண்டுகளுக்கு பின் நீண்ட நேரம் தெரிந்த சந்திர கிரகணத்தை அமெரிக்கா, ஜப்பான், சிலி நாடுகளில் முழுமையாக காண முடிந்தது.
நியூயார்க்கில் ஏறத்தாழ 3 மணி நேரம் 28 நிமிடம் 23விநாடிகள் சந்திர கிரகணம் காணப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது.
99 புள்ளி 1 சதவீதம் அளவுக்கு பூமியை மறைத்து பிளட் ரெட் எனப்படும்இரத்த சிவப்பு வர்ணத்தில் நிலா காட்சியளித்தது.
2030 வரை 20 கிரகணம்
* 2021ம் ஆண்டு முதல் 2030ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் மொத்தம் 20 முழுமையான அல்லது பகுதி சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது.இனி
இதுபோன்ற நிகழ்வு மீண்டும் 2 ஆயிரத்து 669 ஆண்டில் நிகழ வாய்ப்பிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.