(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
இந்த நாட்டிலே தனியார் சட்டங்களில் சில விடயங்கள் முஸ்லிம்களின் இனம் , மதம், கலாசாரம் தொடர்பில் உள்ளன. அதேபோன்று தேசவழமை சட்டம்,கண்டிய சட்டம் போன்றவையும் உள்ளன. இவற்றை இல்லாதொழித்து ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணி ஒன்றை கொண்டு வருவதற்காக ”உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அல்லாஹ் ”எனக்கூறிய ஞானசார தேரரை ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் தலைவராக நியமிதுள்ளீர்கள்.
இந்த உலகில் அல்லாஹ்வை ஏற்றுக்கொண்ட 200 கோடி முஸ்லிமாக்கள் உள்ளனர். அல்லாஹ்வை வஞ்சிப்பதை அல்லாஹ்வை ஏசுவதனை ஏற்றுக்கொள்ளாத 54 முஸ்லீம் நாடுகள் உள்ளன.
அவ்வாறிருக்கையில் ”உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அல்லாஹ் ”எனக்கூறிய ஒரு குற்றவாளியை முன்னாள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட ஒருவரை செயலணியின் தலைவராக நியமித்ததன் நோக்கம் என்ன?அல்லாஹ்வை கேவலப்படுத்திய ஒருவரை நியமித்தான் மூலம் நீங்கள் எதனை எதிர்பார்க்கின்றீர்கள் எனக் கெள்வியெழுப்பினார்.