நாடாளுமன்ற உறுப்பினரான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீனின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் உயர் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடுமையான நிபந்தனைகளுடன் அவர் உயர் நீதிமன்த்தினால் விடுவிக்கப்பட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இவ்வருடம் ஏப்ரல் மாதம் கைதான ரியாஜ் பதியுதீனுக்கு, பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றில் இன்று (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.