இரண்டு வருடங்கள் முடிவதற்குள் அரசாங்கத்தின் மீது ஏற்பட்டுள்ள வெறுப்பின் காரணமாக அரசாங்கத்தில் இருப்பவர்களை கிராமங்களுக்குள் நுழையவிடாது, மக்கள் அடித்து விரட்டுவார்கள் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
மக்களுக்காக தான் எப்போதும் குரல் கொடுப்பதாகவும் பதவிகளை வழங்கி தனது வாயை மூடி விட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ கொண்டு வந்துள்ள வரவு செலவுத்திட்டம், தோல்வியான புடலங்காய் திட்டம் எனவும் அதன் மூலம் மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடந்த ஊடகவியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த போதே மேற்கண்ட விடயங்களை அவர் தெரிவித்தார்.
வரவு செலவுத்திட்டம் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர், சீனிஉட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டிருந்தாக சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் தற்போதைய ஆட்சியாளர்கள், மீண்டும் சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தில் இருந்த வரிசை யுகத்தை நோக்கி நாட்டை கொண்டு சென்றுள்ளனர் என்றார்.
இரண்டு வருடங்கள் முடிவடைவதற்குள் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது என்ற அவர், இப்படியே சென்றால், அரசாங்கத்தில் இருப்பவர்களை கிராமங்களுக்குள் நுழையவிடாது மக்கள்அடித்து விரட்டுவார்கள் என்றும் தெரிவித்தார்.