வரவு – செலவுத் திட்டக் கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னர் 2022 ஜனவரி மாதமே நாடாளுமன்றம் மீண்டும் கூடும். அவ்வாறு கூடும்போது புதிய அரசியலமைப்பை
இயற்றுவதற்கான பணிகள் ஆரம்பமாகும் – என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இன்று தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” புதிய அரசியலமைப்புக்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்த குழுவின் பணிகள் முடிவடைந்த பின்னர், சட்டமூலம் சட்டவரைஞர் திணைக்களத்துக்கு அனுப்படும். அதன்பின்னரே நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும். இவ்வருடத்துக்குள் அப்பணிகள் நிறைவுபெறும்.
அதன்பின்னர் ஜனவரி இறுதியில் அல்லது பெப்ரவரி முதல்வாரத்தில் இருந்து புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்கான பணிகள் ஆரம்பமாகும்.
தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பான தினேஷ் குணவர்தன குழுவின் அறிக்கையும் ஜனவரியில் சபையில் முன்வைக்கப்படும். புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்கு இதுவும் பக்கபலமாக அமையும்.”- என்றார்.