இரண்டு ஹெக்ரேயருக்கு அதிகான விவசாய நிலமிருந்தால் விவசாயிகளுக்கு சன்மானமாக துப்பாக்கிக்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளாா்.
இதற்கு முன்னர், ஐந்து ஹெக்ரேயா் விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மாத்திரமே துப்பாக்கிகளுக்கான அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டதாக தெரிவித்த அவர், காட்டுப் பன்றி போன்று விலங்குகளினால் ஏற்படும் அழிவு அதிகரித்துள்ளதாக விவசாயிகளினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை ஆராய்ந்தத பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டாா்.
இவ்வாறு விலங்குகளினால் ஏற்படும் அழிவுகளினால் நாட்டில் மொத்த விவசாய உற்பத்திகளில் 40 வீதத்திலிருந்து 50 வீதம் வரை பாதிப்பு ஏற்படுவதாகவும் விவசாய அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளாா்.