நாட்டிலுள்ள அநேகமான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் இன்று நீண்ட மக்கள் வரிசையை அவதானிக்க கூடியதாகவுள்ளது.
நாளை இடம்பெறவுள்ள மின்சார சபை ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக மின்தடை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்காக மக்கள்மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக மக்கள் வரிசையில் காத்திருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.
ஒருகொடவத்த எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக நீண்ட மக்கள் வரிசையை அவதானிக்க கூடியதாக இருந்ததுடன் பதுளை சமூபகார நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.
சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மண்ணெண்ணெய் கொள்வனவு இருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.a