நூருல் ஹுதா உமர்
இலங்கையைச் சேர்ந்த தற்போது கட்டார் நாட்டில் ஓவியக் கலையில் தனது திறமையை வெளிக்காட்டி வரும் நஸார் சர்பானை தூதுவர் மபாஸ் மொஹிதீன் அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பதே இச் சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.
இச் சந்திப்பில் நஸார் வரைந்த ஓவியங்கள் தூதுவருக்கு காண்பிக்கப்பட்டதோடு, தூதுவரும் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்திருத்தார். தற்போது கத்தாரா அரங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஓவியக் கண் காட்சியில் நஸார் சர்பான் வரைந்த ஓவியங்களும் இடம்பெற்றுள்ளது.
நீங்களும் சென்று இவ் இளைஞனின் ஓவியங்களை கண்டு ரசிப்பதுடன், அவரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களையும் தெரிவிக்க முடியும்.
இச் சந்திப்பினை ஒழுங்கு செய்த இலங்கை தூரதரக சிரேஷ்ட அதிகாரி ரஷீத் எம். பியாஸ் (நளீமி) மிக்க நன்றிகள்
Special Thanks:
கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல்
நஜ்முல் ஹுசைன்
அண்மையில் வெளியிடப்பட்ட துணிந்தெழு சஞ்சிகையில் இவரை பற்றிய முழு விபரங்கள் பிரசுரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இவரை போன்ற சமூகத்தில் மறைந்திருக்கும் இளைஞர்களை,
ஆளுமைகளை வெளிக் கொணர்ந்து அவர்களுக்கான எதிர்கால திட்டங்களுக்கான வழிகாட்டல்களை ஏற்படுத்திக் கொடுப்பதே எம் நோக்கமாகும்.