Our Feeds


Friday, November 5, 2021

SHAHNI RAMEES

புகையிரத திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

 


நகரங்களுக்கு இடையிலான கடுகதி புகையிரத சேவைகளை எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் இதனைத் தெரிவித்தார்.

இரவுநேர அஞ்சல் புகையிரதம் மற்றும் வழமையான நேர அட்டவணைக்கு அமைய இரவு 7 மணிக்கு பின்னர் இடம்பெறும் புகையிரத சேவைகளுடன், குறுந்தூர புகையிரத சேவைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையிலான அலுவலக புகையிரத சேவைகள் மாத்திரம் ஆரம்பிக்கப்பட்டன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »