இதன்போது அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானியும் சிரேஸ்ட காவற்துறை மா அதிபருமான நிலந்த ஜயவர்தனவினால் சாட்சி வழங்கப்பட்டது.
ஐ.எஸ் அடிப்படைவாத கருத்து பரப்பல்கள் மற்றும் எதிர்காலத்தில் தாக்குதல் ஒன்றுக்காக ஈடுபடுத்தக்கூடிய 94 பேர் தொடர்பான தகவல்கள் 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி காவற்துறை மா அதிபருக்கு தம்மால் அனுப்பப்பட்ட கடிதம் மூலம் அறியப்படுத்தப்பட்டிருந்ததாக அவர் சாட்சி வழங்கியுள்ளார்.
தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பினால் கொழும்பில் உள்ள இந்திய தூதரக காரியாலயம் மற்றும் முக்கிய தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக 2019 ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி வெளிநாட்டு தகவலாளி ஒருவரால் தமக்கு தகவல்கள் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி தேசிய புலனாய்வு பிரதானி சிசிர மெண்டிஸிற்கும் பின்னர், அப்போதைய பாதுகாப்பு செயலாளர் மற்றும் காவற்துறை மா அதிபர் ஆகியோருக்கு அறியப்படுத்தியதாகவும் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானியும் சிரேஸ்ட காவற்துறை மா அதிபருமான நிலந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.