Our Feeds


Saturday, November 13, 2021

Anonymous

83 வயதான முஹம்மது ஷரீப் என்பவருக்கு இந்தியாவின் உயரிய பத்மஸ்ரீ விருது இந்திய ஜனாதிபதி & பிரதமரினால் வழங்கப்பட்டது ஏன்?

 



இந்தியாவின் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சைக்கிள் மெக்கானிக்கான முகமது ஷெரீப் (83) என்பவர் இந்திய குடியரசு தலைவர் கையினால் பத்மஸ்ரீ விருதைப் பெற்றுள்ளார். ஷெரீப் சாச்சா என்று அந்த பகுதி மக்களால் அன்பாக அழைக்கப்பட்டு வரும் இந்த முதியவர்,


அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கரசேவகர்களால் உடைக்கப்பட்ட போது 1992ம் ஆண்டு கலவரம் உச்சத்தில் இருந்துள்ளது. அப்போது சுல்தான்பூர் என்ற ஊருக்கு ஷெரீப்பின் மகன் ரயீஸ் வேலை விடயமாக செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. ரயீஸ் சுல்தான்பூர் சென்றபோது மத கலவரத்தில் சிக்கி, படுகொலை செய்யப்பட்டுள்ளார்


பல நாட்களாக  அவரின் உடல் அடையாளம் தெரியாமல் இருக்க, அநாதைப் பிணமாகக் கருதி இறுதிச் சடங்கு செய்யப்பட்ட பின்பே ஷெரீப் குடும்பத்துக்கு தெரியவந்தது.


இந்த சம்பவம் ஷெரீப் மனதில் நீங்கா வடுவை ஏற்படுத்தியது. அந்த சம்பவம் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, ஒரு முடிவெடுத்தார் ஷெரீப். அது கேட்பாரற்று கிடக்கும் உடல்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்வது. இறந்த தனது மகனின் நினைவாக இதனை செய்யத் தொடங்கினார். கடந்த 27 ஆண்டுகளாக பைஸாபாத் நகரத்தை சுற்றிய பகுதிகளில் கேட்பாரற்று கிடந்த ஆயிரக்கணக்கான உடல்களுக்கு இறுதிச்சடங்குகள் செய்துள்ளார்.


பாலிவுட் நடிகர் அமீர்கான் தொகுத்து வழங்கிய பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான சத்யமேவ் ஜெயதே நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு முகமது ஷெரீப் நாடு முழுக்க பிரபலமானார்.


அப்போதுதான் ஷெரீப் செய்யும் சமூக சேவை அனைவரது கவனத்திற்கும் போனது.  மதபாகுபாடு இல்லாமல அனைவரது  உடல்களுக்கும் இறுதிச் சடங்குகளுக்கு ஏற்பாடு செய்தவர்


அவரது இந்த மகத்தான பணியை பாராட்டி பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவம் செய்திருக்கிறது மத்திய அரசு.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »