கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவில் பிரமந்தாறு பிரதேசத்தில் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதல்
தொடர்பில் விசாரணைகளுக்காகச் சென்ற தர்மபுரம் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பிரதேசத்திலுள்ள சிலரால் கடுமையான தாக்குதலுக்கு இலக்கான சம்பவம் தொடர்பில் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு பொலிஸாரை தாக்கியமை தொடர்பில் தேடப்பட்டு வந்த 6 சந்தேக நபர்கள் வெலிக்கடை பொலிஸ் பிரிவில் ராஜகிரிய பிரதேசத்தில் தொழில் புரிந்து வருவதாக நுகேகொட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சந்தேக நபர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 20, 23, 25 மற்றும் 28 வயதுடைய தர்மபுரம் மற்றும் பிரமந்தாறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். நுகேகொட குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.