ரி20 உலகக்கிண்ண போட்டித் தொடரில் இன்று இடம்பெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்த்தாடிய தென்னாபிரிக்கா அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட பங்களாதேஷ் அணிக்கு அழைப்பு விடுத்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 84 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
அவ்வணி சார்பில் மெஹெதி ஹசன் 27 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் ககிசோ ரபாடா மற்றும் அன்ரிச் நார்ட்ஜே ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
அதன்படி, 85 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 13.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
தென்னாபிரிக்கா அணி சார்பில் அணித்தலைவர் டெம்பா பவுமா ஆட்டமிழக்காது 31 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் தஷ்கின் அஹ்மட் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இந்த தோல்வியை தொடர்ந்து பங்களாதேஷ் அணி கலந்து கொண்ட நான்கு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.