நாட்டில் மக்கள் வைத்திருந்த எதிர்பார்ப்பெல்லாம் தவிடுபொடியாகியுள்ளதால் நாட்டை 10 வருடங்கள் இராணுவத்தினரிடம் ஒப்படைக்குமாறு தென்மாகாணத்தின் பிரசித்தி பெற்ற தேரர்களில் ஒருவரான கெட்டமானே தம்மாலங்கார தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாத்தறையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் மேலும் கூறியதாவது,
இந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒன்றுமில்லையென பொதுஜன பெரமுனவின் முக்கியமான ஒருவர் என்னிடம் கூறினார். இந்த அரசால் நாட்டுக்கு என்ன நடந்தது? இதை யாரிடம் சொல்வது? நாட்டையும் நாசமாக்கி அரசியலையும் நாசமாக்குகின்றனர். 69 இலட்சம் பேரில் 60 இலட்சம் பேர் வேதனையில் இருக்கின்றனர். அமைச்சர்கள் மீது மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்.
இந்த தேவைக்கில்லாத ஜனநாயகம் எல்லாம் தேவையில்லை. நாட்டின் மீதும் மக்கள் மீதும் அன்பு இருக்குமாயின் ஜனாதிபதி கோட்டாபய, 10 வருடங்களுக்கு நாட்டை இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டுமென கேட்கிறேன். - என்றார்.