நாட்டில் நேற்று (07) மாலை 5 மணியளவில் 458 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இரவு 8 மணியளவில் மேலும் 168 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளாா்.
அதற்கமைய, நேற்றைய தினம் இனங்காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 626 ஆல் அதிகரித்துள்ளது. மூன்றாவது நாளாகவும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை இவ்வாறு 600 ஐ கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கடந்த 6 ஆம் திகதி 617 கொரோனா நோயாளர்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 45 ஆயிரத்து 256 ஆக அதிகரித்துள்ளது.