இரண்டு டெஸ்ட் போட்டிகளை எதிர்கொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (21) ஆரம்பமாகவுள்ளது.
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியொன்றை எதிர்கொள்வதற்காக 6 வருடங்களின் பின்னரே, மேற்கிந்திய தீவுகள் அணி நாட்டை வந்தடைந்துள்ளது.
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளுக்கு இடையில் இதுவரை 22 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் இடம்பெற்றுள்ளன.
இவற்றில் 9 போட்டிகளில் இலங்கை அணியும், 4 போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணியும் வெற்றி பெற்றுள்ளன.
எஞ்சிய 9 போட்டிகளும் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளன.
இதேவேளை, சிறியதொரு இடைவெளிக்கு பின்னர், இலங்கை அணிக்கு அஞ்சலோ மெத்தீவ்ஸ் அழைக்கப்பட்டுள்ளார்.