சபுகஸ்கந்த, மாபிம வீதிக்கு அருகில் குப்பை கூழமொன்றிலிருந்து கைகால் கட்டப்பட்ட நிலையில் பிரயாண பையிலிருந்து பெண்ணொருவரின் சடலம் இன்று (04) பிற்பகல் மீட்கப்பட்டிருந்தது.
இவ்வாறு உயிரிழந்துள்ள பெண் 35 – 40 வயதுக்கு இடைப்பட்டவர் என்று சந்தேகிப்பதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.
பையொன்றில் பொதி செய்யப்பட்ட நிலையிலேயே இவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இதுவரையில் குறித்த பெண் தொடர்பான அடையாளம் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று பொலிஸாா் மேலும் குறிப்பிட்டுள்ளனா்.
சந்தேகத்துக்கிடைமாக பிரயாண பையொன்று இருப்பதாக சபுகஸ்கந்த பொலிஸாருக்கு நபரொருவர் வழங்கிய தகவலக்கமையவே குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்துள்ள பெண் கறுப்பு மற்றும் சிவப்பு நிறத்திலான சட்டையொன்றை அணிந்திருந்ததாகவும் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையிலிருந்ததாகவும் பொலிஸாா் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சடலம் கடுமையாக சேதமாகியிருந்ததாகவும் 5 நாட்களுக்கு முன்னா் இவர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிஸாா் தெரிவிக்கின்றனர்.
இன்று சம்பவ இடத்துக்கு வருகை தந்த மஹர மேலதிக நீதவான் ரமணி சிறிவர்தன நீதவான் பரிசோதனைகளை முன்னெடுத்திருந்தாா்.
அதன் பின்னர் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக ராகம போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இதேபோன்றதொரு சம்பவம் புறக்கோட்டை, டேம் வீதி பிரதேசத்தில் மார்ச் மாதம் முதலாம் திகதி இடம்பெற்றிருந்தது.
இவ்வாறு டேம் வீதியிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலமும் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இதேபோன்று பிரயாண பையிலிருந்தே மீட்கப்பட்டிருந்தது. அந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான உப பொலிஸ் பரிசோதகரைக் கைதுசெய்ய சென்றிருந்த சமையம் தற்கொலை செய்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.