மண்சரிவு அனர்த்தத்துடன் கூடிய 5 பாதைகள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு - கண்டி பாதையில் கடுகண்ணாவை, மாவனல்லை - கேகாலைக்கு இடையிலும் கண்டி - நுவரெலியா வீதியிலும், கம்பளை - நாவலப்பிட்டி வீதியிலும் எல்ல - வெள்ளவாய உள்ளிட்ட பகுதியிலும் இந்த அனர்த்த நிலை காணப்படுவதாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் மக்களை அவதானமாக செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)