நேற்று (21) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, பாலமோட்டைப் பகுதியில் உள்ள தமது காணியை உழவு இயந்திரன் மூலம் உழுத போது இரு பிள்ளைகளையும் உழவு இயந்திரத்தின் இரு மருங்கிலும் இருத்தி விட்டு உழுதுள்ளனர்.
இதன்போது உழவு இயந்திரத்தின் ஒரு பக்கத்தில் அமர்ந்திருந்த குழந்தை, உழவு இயந்திரம் உழுத போது தவறி கீழே விழுந்து உழுது கொண்டிருந்த கலப்பைக்குள் அகப்பட்டு வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளது.
குழந்தையை மீட்டு வவுனியா வைத்தியசாலைக்கு வாகனத்தில் ஏற்றி கொண்டு வந்த போதும் வைத்தியசாலைக்கு வருவதற்கு முன்னரே குழந்தை இறந்துள்ளது. வவுனியா, பலமோட்டையைச் சேர்ந்த க.கனிசன் (வயது 5) என்ற குழந்தையே இவ்வாறு மரணமடைந்தவராவார்.
சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வைத்தியசாலைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-வவுனியா தீபன்-