Our Feeds


Wednesday, November 17, 2021

SHAHNI RAMEES

வாட்ஸ்அப்பில் விரைவில் வெளியாக இருக்கும் 5 புதிய அப்டேட்டுகள்!

 


மிக சிறந்த உடனடி மெசேஜ் சேவையான வாட்ஸ்அப் அவ்வப்போது தனித்துவமான அப்டேட்களை வெளியிடுவது வழக்கம். தனது பல கோடி யூசர்களை எப்போதும் புதுமையுடன் வாட்ஸ்அப்பை பயன்படுத்த செய்ய வேண்டும் என்கிற நோக்கிலே எண்ணற்ற அப்டேட்கள் இதில் வெளியாகின்றன. அந்த வகையில் இன்னும் சில நாட்களில் வாட்ஸ்அப்பில் சில முக்கிய அப்டேட்கள் வரவுள்ளது. அவற்றில் 5 புதிய அம்சங்களை பற்றி அவசியம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அவை என்னென்ன என்பது இனி பார்ப்போம்.


வாட்ஸ்அப் பிசினஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் புதிய வாடிக்கையாளர்களை எளிதில் பெறும் வகையில் வாட்ஸ்அப்பில் விளம்பரங்களை உருவாக்க முடியும். இந்த விளம்பரங்கள் ஃபேஸ் புக் மூலம் புது வாடிக்கையாளர்களை சென்றடையும். iOS 2.21.230.15 வெர்ஷன் கொண்ட ஐபோன் யூசர்களும், ஆண்ட்ராய்டு 2.21.23.15 வெர்ஷன் கொண்ட யூசர்களும் இதன் பீட்டா வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியும். வாட்ஸ்அப் பிசினஸில் விளம்பரங்கள் உருவாக்க ஃபேஸ்புக் அட்வெர்டைஸ் செட்டிங்ஸிற்கு சென்றால் போதும்.


வாட்ஸ்அப் மை கான்டெக்ட்ஸ் எக்செப்ட் :
இந்த அப்டேட் ஐபோன் யூசர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். தனது யூசர்களின் பிரைவசியை பாதுகாக்க வேண்டுமென்று இந்த ‘My Contacts Except’ என்கிற ஆப்ஷனை வாட்ஸ்அப்பில் சேர்த்துள்ளனர். கடைசியாக நீங்கள் பயன்படுத்திய நேரம், உங்களை பற்றிய விவரங்கள், யாரெல்லாம் உங்கள் போட்டோவை பார்க்க வேண்டும் போன்ற முக்கிய தகவல்களை வெளி நபர் யாராலும் இனி பார்க்க இயலாது. அதற்கு இந்த புது அப்டேட் உங்களுக்கு உதவும்.


எமோஜி மற்றும் ஸ்டிக்கர்கள் :
புதுவிதமான எமோஜிகள் மற்றும் ஸ்டிக்கர்களை நீங்கள் வாட்ஸ்அப்பில் இனி பயன்படுத்தி கொள்ளலாம். பீட்டா வெர்ஷனை அப்டேட் செய்து கொண்டு இந்த சிறப்பம்சத்தை நீங்கள் பெறலாம். இது ஆண்ட்ராய்டு 2.21.20.2 வெர்ஷனில் செயல்படுகிறது. நீங்கள் எடிட் செய்யும் படத்தின் பேக்கிரவுண்ட்டை மாற்றுவதுடன், உங்களுக்கு பிடித்த ஸ்டிக்கர் அல்லது எமோஜியை அதில் சேர்க்கலாம்.


வாட்ஸ்அப் கமியூனிட்டி :
வாட்ஸ்அப் குரூப்ஸ் பயன்பாட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வாட்ஸ்அப் கமியூனிட்டி அறிமுகம் செய்யப்படுகிறது. குறிப்பிட்ட கமியூனிட்டியை சேர்ந்த சிறு சிறு குழுக்களை அதன் அட்மின்கள் எளிதாக கையாள இது உதவும். இதை பயன்படுத்த “Community Invite Link” என்கிற ஆப்ஷனை தேர்வு செய்யலாம். இந்த அப்டேட் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் இரண்டிலும் வரவுள்ளது.


பல சாதனங்களில் வேலை செய்யும் :
சில வாரங்களுக்கு முன் வாட்ஸ்அப்பை பல சாதனங்களில் பயன்படுத்தலாம் என்கிற புதிய அப்டேட்டை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்தது. ஆனால், இனி வரும் அப்டேட்டில் இதை நீக்குவதாக வாட்ஸ்அப் குழு அதன் பிளாகில் தெரிவித்துள்ளது. ஐபோன் யூசர்கள் சிலருக்கு மட்டுமே இந்த பீட்டா வெர்ஷன் செயல்பட்டு வருகிறது. மேலும் பல யூசர்களுக்கு விரைவில் இந்த சிறப்பம்சம் செயல்படும் என வாட்ஸ்அப் கூறியுள்ளது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »