Our Feeds


Saturday, November 20, 2021

ShortNews Admin

இந்தியாவிடமிருந்து 50 கோடி டொலர் கடனாக பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் முயற்சி



இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்கும் நோக்கில், இந்தியாவிடமிருந்து 50 கோடி டொலரை அவசர கடனுதவியாக பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்த விடயம் தொடர்பிலான கலந்துரையாடல்களை இலங்கையின் உயர்மட்ட அதிகாரிகள், இந்திய அரசாங்கத்துடன் ஆரம்பித்துள்ளனர்.


டொலர் தட்டுப்பாடு காரணமாக பெற்றோலியக் கூட்டுதாபனம் பாரிய நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது.


இதனால், எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான டொலரை தேடிக்கொள்வதற்கும், பெற்றோலிய கூட்டுதாபனம் பாரிய சவால்களை எதிர்நோக்கியுள்ளது.


மசகு எண்ணெய் இறக்குமதிக்கு போதியளவு டொலர் இல்லாமையினால், சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் கடந்த வாரம் முதல் மூடப்பட்டது.


எரிபொருள் இறக்குமதிக்காக மாதாந்தம் 350 மில்லியன் டொலர் தேவைப்படுவதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இந்த பணத்தை தேடிக்கொள்வதில் பாரிய நெருக்கடி காணப்படுவதாகவும் அவர் கூறினார்.


இவ்வாறான விடயங்களை கருத்திற்கொண்டே, இந்தியாவிடமிருந்து 50 கோடி டொலரை அவசர கடனாக பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »