ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 5ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் ஆசியுடன், பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் கொழும்பு தாமரை தடாகத்தில் இன்று நடைபெறும் இந்நிகழ்வில் கட்சியின் ஸ்தாபகர் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச உட்பட கட்சி பிரமுகர்கள் பங்கேற்கவுள்ளனர்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசியல் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கும் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மொட்டு கட்சிக்கும், பங்காளிகளுக்குமிடையில் தற்போது மோதல் ஏற்பட்டுள்ளதால், பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்களா என்பது கேள்விக்குறியாக இருந்தது. எனினும், மாநாட்டில் பங்கேற்க பங்காளிகள் முடிவெடுத்துள்ளனர்.
2016 நவம்பர் 2 ஆம் திகதி உதயமான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, குறுகிய காலப்பகுதியிலேயே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.