பண்டாரவலை சிறுவர் காப்பகத்தில் 5 வயதுக்கு குறைவான 27 போ் உள்ளிட்ட 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பண்டாரவலை நிர்வாக பொதுச் சுகாதார பரிசோதகா டீ.எம்.ஏ.ஆர். திஸாநாயக்க தெரிவித்துள்ளாா்.
குறித்த சிறுவர் காப்பகத்தில் சிறுவர்களை பராமரிப்பதற்காக சேவைக்கு அமர்த்தப்பட்டிருந்த நபர் உள்ளிட்ட பணியாளர்கள் மற்றும் 52 சிறுவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட் அன்ரிஜன் பரிசோதனையில் இவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு தொற்றுக்குள்ளான 32 பேரும் குறித்த சிறுவர் காப்பகத்திலேயே வைத்தியர்களின் மேற்பார்வை மற்றும் ஆலோசனைக்கமைய சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
இந்த சிறுவர் காப்பகத்தில் இருக்கும் 5 வயதுக்கு குறைவான சிறுவர்கள் இருப்பதால் விசேட கவனம் செலுத்த வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளதாக பண்டாரவலை நிர்வாக பொதுச் சுகாதார பரிசோதகா் டீ.எம்.ஏ. ஆர். திஸ்நாயக்க மேலும் தெரிவித்துள்ளாா்.