இந்த தடுப்பூசியை 25 நேற்று முன்தினம் பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 17,798 இதற்கமைவாக, இதுவரையில் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களின் எண்ணிக்கை 398,013 ஆக அதிகரித்திருப்பதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
பைசர் தடுப்பூசியின் முதலாவது டோசை நேற்று முன்தினம் பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 636 இதன் இரண்டாவது டோஸை பெற்றவர்களின் எண்ணிக்கை 426 என்றும் அந்த பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக இதுவரையில் ஏதாவது ஒரு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸை பெற்றவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 59 இலட்சத்து 18 ஆயிரத்து 179 ஆகும். இதில் 1 கோடியே 37 இலட்சத்து 23 ஆயிரத்து 234 பேர் இதுவரையில் இரண்டாவது டோஸை பெற்று இருப்பதாகவும் தொற்றுநோயியல் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)