இலங்கை மத்திய வங்கிக்கு நான்கு புதிய உதவி ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் 17ஆம் திகதி நடைபெற்ற நாணயச் சபையின் கூட்டத்திலேயே இந்த நியமனம் தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கமைய, கே.ஜி.பி. சிறிகுமார, டி. குமாரதுங்க, யூ.எல். முதுகல மற்றும் சி. பி. எஸ். பண்டார ஆகியோரே உதவி ஆளுநர்களாக பதவியுயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கே.ஜி.பி. சிறிகுமார
சிறிகுமார, மத்திய வங்கியில் 21 ஆண்டுகளுக்கு மேலாக சட்டம் மற்றும் இணங்குவித்தல் மற்றும் செயலகத் திணைக்களங்களில் வெவ்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
இவர் - தேசிய கொடுப்பனவுச் சபை, நிதியியல் உறுதிப்பாட்டுக் குழு, நிதியல்லா இடர்நேர்வு முகாமைத்துவக் குழு உறுப்பினராகவும் 2006ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க கொடுப்பனவு உபாயங்களின் மோசடிகள் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட நிபுணர் குழாத்திலும் பணியாற்றியுள்ளார்.
இவர் - நாணயச் சபை ஆலோசனைக் கணக்காய்வுக் குழு மற்றும் இடர்நேர்வு மேற்பார்வைக் குழு ஆகியவற்றில் அவதானிப்பளராகவும் பணியாற்றியுள்ளார்.
சிறிகுமார - வங்கித்தொழில் மற்றும் நிதியியல் துறை, நிதியியல் சந்தை உட்கட்டமைப்பு வசதிகள், மூலதனச் சந்தைகள் மற்றும் பணத்தூயதாக்குதலை மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை முறியடித்தல் ஆகியவற்றில் பல எண்ணிக்கையான சட்ட சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதில் முக்கிய ஏதுவாக
அமைந்திருந்தார்.
இவர் - வங்கிக்குள் கண்டிப்பான ஆளுகை நியமங்களை அறிமுகப்படுத்தியுள்ளதுடன் நிதியியல் துறையை வலுப்படுத்துவதற்கான தீர்மானம் மற்றும் நடைமுறைப்படுத்தல் வழிமுறைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளார். சிறிகுமார, அவுஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகத்திலுலிருந்தும் கொழும்புப் பல்கலைக்கழகத்திலிருந்தும் சட்ட முதுமானிப் பட்டங்களை பெற்றவராவார்.
இவர்இ சட்ட இளமானிப் பட்டத்தை கொழும்புப் பல்கலைக்கழகத்திலும் பெற்றவராவார். இவர்இ ஒரு சட்டத்தரணியும் ஐக்கிய இராச்சியத்தின் சர்வதேச இணங்குவித்தல் அமைப்பின் உறுப்பினருமாவார். மேலும், இவர் பணத்தூயதாக்கலிற்கு எதிரானது (பட்டதாரி) மற்றும் இணங்குவிப்பு (பட்டதாரி) தொடர்பான சர்வதேச டிப்ளோமாக்களைப் பெற்றவராவார்.
டி. குமாரதுங்க
குமாரதுங்க, மத்திய வங்கியில் 30 ஆண்டுகால அனுபவத்தினைக் கொண்டவராவார். இவர் 2016 தொடக்கம் கொடுப்பனவுகள் மற்றும் தீர்பனவுகள் திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் பொருளாதார ஆராய்ச்சி, வங்கித்தொழில் கற்கைகளுக்கான ஆய்வு நிலையம்இ தகவல் தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவக் கணக்காய்வு போன்ற திணைக்களங்களில் பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளார்.
குமாரதுங்க, லங்கா பினான்ஸியல் சேர்விஸஸ் பீயுரோ லிமிடெட் பணிப்பாளர் சபையிலும் தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவனத்தின் ஆளுகைச் சபையிலும் இலங்கை மத்திய வங்கியைப் பிரதிநிதித்துவர்படுத்தியுள்ளார்.
இவர், இலங்கை வங்கியாளர்கள் நிறுவகத்தின் கல்விச் சபை உறுப்பினராகவும் பாடவிதான மீளாய்வுக் குழாத்திலும் இருந்துவருவதுடன் வியாபார முகாமைத்துவத்தின் தேசிய நிறுவகம், ஆளுகைச் சபை, போக்குவரத்து அமைச்சினால் நியமிக்கப்பட்ட போக்குவரத்து அட்டைப் பயன்பாட்டினை கண்காணிப்பதற்கான வழிகாட்டல் குழு, தொழிலாளர்கள் பணவனுப்பல்கள் செயலணி, ஜனாதிபதி செயலணிக்குழுவினால் நியமிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் வெளியிலிருந்து வியாபாரப் பணிகளைப் பெற்றுக்கொள்ளல் துறைசார் செயலணி, டிஜிட்டல் தளக் கொள்கை கட்டமைப்பு மீதான வழிகாட்டல் குழு, இலங்கை தகவல் மற்றும் தொடர்பூட்டல் தொழில்நுட்ப முகவராண்மை மூலமான ஒரே சீரமையான டிஜிட்டல் வியாபார அமைப்பொன்றினை உருவாக்குவதற்கான வழிகாட்டல் மற்றும் நடவடிக்கைத் திட்டம் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் வங்கித்தொழில் கற்கைகள் ஆய்வு நிலையத்திற்கான ஆலோசனைக் குழு ஆகியவற்றிலும் பணியாற்றியுள்ளார்.
மேலும், இவர் தேசிய கொடுப்பனவுச் சபையின் செயலாளர், இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் தொழில்நுட்பத்தினை ஒழுங்குமுறைப்படுத்தும் பரிசோதனைக் கட்டமைப்பின் நிதியியல் தொழில்நுட்ப முன்னேற்றக் குழு உறுப்பினர், புதிய அதே நேர மொத்தத் தீர்ப்பனவு முறைமையொன்றின் பெறுகை மற்றும் நடைமுறைப்படுத்தல் பற்றிய வழிகாட்டல் குழு, நிதியியல் முறைமை உறுதிப்பாட்டுக் குழுஇ வெளிநாட்டு ஒதுக்குகள் முகாமைத்துவத்திற்கான புதிய திறைசேரி முகாமைத்துவ முறைமையொன்றின் பெறுகைக்கான வழிகாட்டல் குழு ஆகியவற்றின் உறுப்பினர், டிஜிட்டல் பேரேட்டுத் தொழில்நுட்பம் அடிப்படையிலான உங்கள் வாடிக்கையாளரை தெரிந்துக்கொள்ளல் முன்னோடி உருவாக்க கருத்திட்டத்தின் தெரிவுக் குழு மற்றும் ஆளுகைக் குழு மற்றும் பங்க் ஒப் கொரியா கொடுப்பனவு முறைமைகள் தொடர்பான அறிவுக் கூட்டாண்மை நிகழ்ச்சித்திட்ட குழுத் தலைவர் போன்ற பதவிகளில் உள்ளகக் குழுக்களில் பணியாற்றியுள்ளார்.
குமாரதுங்க, தகவல் தொழில்நுட்பவியலில் விஞ்ஞான முதுமானிப் பட்டத்தை கொழும்புப் பல்கலைக்கழகத்திலும், பொருளியலில் கலை முதுமானிப் பட்டத்தையும் பட்டப்பின்படிப்பு டிப்ளோமாவினையும் ஐக்கிய இராச்சியத்தின் எசெக்ஸ் பல்கலைக்கழகத்திலும், வர்த்தக இளமானிப் பட்டத்தைப் பேராதனைர் பல்கலைக்கழகத்திலும் பெற்றவராவார்.
மேலும், கொழும்புப் பல்கலைக்கழகத்திலிருந்து இவர் தகவல் தொழில்நுட்பவியலில் முதுமானி டிப்ளோமாவையும் பெற்றவராவார்.
யூ.எல். முதுகல
முதுகல, மத்திய வங்கியின் செயலகம், நிதி, வங்கி மேற்பார்வை, பொதுப் படுகடன், பன்னாட்டு தொழிற்பாடுகள்இ உள்ளகக் கணக்காய்வு, நிதியியல் முறைமை உறுதிப்பாடு, வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வை, போன்ற திணைக்களங்களில் பல்வேறு பதவிகளில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியுள்ளார்.
இவர் இலங்கை மத்திய வங்கியின் முதன்மைக் கணக்காளராகவும் செயலாளராகவும் தொழிற்பட்டுள்ளார். இவர், நிதியியல் முறைமை உறுதிப்பாடு, நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குவிதிகள், படுகடன் மற்றும் சொத்துப்பட்டியல் முகாமைத்துவம், பன்னாட்டு நிதி அத்துடன் வெளிநாட்டு ஒதுக்குகள் முகாமைத்துவம் போன்ற மைய மத்திய வங்கித்தொழிலின் துறைகளில் நிபுணத்துவம் பெற்றுள்ளார்.
திருமதி முதுகல, பன்னாட்டு ஒதுக்குகள் முகாமைத்துவ குழு, உள்நாட்டு படுகடன் முகாமைத்துவ குழு, உள்ளக முதலீட்டு குழுஇ இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற நாட்டிற்கான பன்னாட்டு முறிகள் மீதான குழு, கொவிட்-19 நோய்த் தொற்று தொடர்பில் தாபிக்கப்பட்ட அவசர நடவடிக்கை செயலணிக் குழு என்பவை உள்ளடங்களாக பல்வேறு குழுக்களில் உறுப்பினராகவும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டுக் குழுஇ கணக்காய்வுக் குழு மற்றும் உள்ளக முதலீட்டு மேற்பார்வைக் குழு என்பவற்றின் அவதானிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான மத்திய வங்கியின் நம்பிக்கைப் பொறுப்பு நிதி உள்ளடங்களாக ஊழியர் சங்கங்களினால் வங்கிக்குள் நடைமுறைப்படுத்தப்பட்ட நிறுவன சமூகப் பொறுப்பு செயற்றிட்டங்களிலும் முனைப்புடன் ஈடுபட்டுள்ளார்.
இவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் வியாபார நிருவாகத்தில் முதுமானிப் பட்டத்தைப் பெற்றுள்ளதுடன் ஐக்கிய இராச்சியத்தின் பட்டயக் கணக்காளர் முகாமைத்துவ நிறுவனத்தின் சக உறுப்பினராகவும் உள்ளார். இவர் நிதியியல் சந்தைகள் சங்கத்தில் ACI Dealing சான்றிதழையும் பெற்றுள்ளார்.
சி.பி.எஸ்.பண்டார
சி.பி.எஸ். பண்டார, இலங்கை மத்திய வங்கியில் நிதியியல் முறைமை உறுதிப்பாடுஇ பொருளாதாரம் மற்றும் விலை உறுதிப்பாடு, நிறுவனப் பணிகள், முகவர் தொழிற்பாடுகள், தொழில் தொடர்ச்சித் திட்டமிடல்இ தொழில்முயற்சி முழுவதுமான இடர்நேர்வு முகாமைத்துவம் மற்றும் உபாயத் திட்டமிடல் போன்ற துறைகளில் 24 வருடங்களுக்கு மேலான அனுபவத்தினைக் கொண்டுள்ளார்.
இவர், இடர்நேர்வு முகாமைத்துவம், கொள்கை மீளாய்வு மற்றும் கண்காணிப்பு, கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள்இ பொதுப் படுகடன் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் போன்ற திணைக்களங்களில் பணியாற்றியுள்ளார்.
இவர், நாட்டிற்கான தரமிடல் குழுவின் செயலாளராகவும், இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற நாட்டிற்கான பன்னாட்டு முறிகளுக்கான வழிநடாத்தல் குழுவின் உறுப்பினராகவும், கொடுப்பனவுகள் மறுசீரமைப்பு வழிநடாத்தல் குழுவின் செயலாளராகவும், இடர்நேர்வு மேற்பார்வைக் குழுவின் உதவிச் செயலாளராகவும், நிதியியல்லா இடர்நேர்வு முகாமைத்துவக் குழுவின் செயலாளராகவும், ஊழியர் சேமலாப நிதிய முதலீட்டு மேற்பார்வைக் குழுவின் உறுப்பினராகவும்,நாணயச் சபையின் ஆலோசனை கணக்காய்வுக் குழு,தொழில் தொடர்ச்சித் திட்டமிடல் குழு, பன்னாட்டு ஒதுக்குகள் முதலீட்டு மேற்பார்வைக் குழு, உள்ளக முதலீட்டு மேற்பார்வைக் குழு மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டு குழு என்பவற்றின் அவதானிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
தேசிய மட்டத்திலான கருத்திட்டங்களை அமுல்ப்படுத்துவதனூடாக நாட்டின் நிதியியல் சந்தை உட்கட்டமைப்பினை மேம்படுத்துவதற்கு தாபிக்கப்பட்ட அமைச்சரவை நியமித்த பல குழுக்களில் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
சி. பி. எஸ். பண்டார, இலங்கை மத்திய வங்கிக்கும் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் முதனிலை வணிகர்களுக்குமிடையிலான முதலாவது இணையவழி தொடர்பூட்டல் வலையமைப்பினை நிறுவுவதற்கும் லங்கா பினான்ஸியல் சேர்விஸஸ் ப Pயுரோ லிமிடெட் இனை தாபிப்பதற்கும் முக்கிய ஏதுவாக இருந்துள்ளார்.
இவர், அரசாங்க பிணையங்களின் முதலாந்தர ஏலத்திற்கான இலத்திரனியல் விலைக்குறிப்பீட்டு முறைமைஇ திறந்த சந்தைத் தொழிற்பாடுகளுக்கான தீர்ப்பனவு முறைமைஇ இலங்கை மத்திய வங்கியின் இணையவழி நிதியியல் சந்தை கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் அறிக்கையிடல் முறைமைகள் என்பவற்றை வடிவமைத்து உருவாக்கியுள்ளார்.
இவர், நாட்டின் தேசிய கொடுப்பனவுகள் மற்றும் பிணையங்கள் தீர்ப்பனவு முறைமைகளின் கட்டமைப்பினை நடைமுறைப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியுள்ளார். இவர்இ சபையின் பணிப்பாளராகவும், மனித வளக் குழுச் சபை மற்றும் தேசிய தீ ர்ப்பனவு நிறுவனத்தின் (லங்காகிளியர் பிரைவட் லிமிடெட்) சபைக் கணக்காய்வு குழு உறுப்பினராகவும், லங்காகிளியர் பிரைவட் லிமிடெட் இன் பல்வேறு தொழில்நுட்ப மற்றும் வழிநடாத்தல் குழுக்களின் தலைவராகவும், உறுப்பினராகவும்,
பணியாற்றியுள்ளார்.
இவர் இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுச் சபையின் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டதுடன்இ இலங்கை வங்கியியலாளர்கள் நிறுவனத்தின் பிரதம பரீட்சகராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர், அவுஸ்திரேலியாவில் சார்லஸ் ஸ்டர்ட் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பவியலில் விஞ்ஞான முதுமானிப் பட்டத்தையும், அவுஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகத்தில் கணினி விஞ்ஞானத்தில் தொழில்நுட்ப இளமானிப் பட்டத்தையும் மத்திய வங்கித்தொழிலில் டிப்ளோமாவையும் பெற்றுள்ள இவர், இலங்கை கணினிச் சங்கத்தின் உறுப்பினருமாவார்.