நெனோ நைட்ரஜன் மூலத்துடன் கூடிய விஷேட திரவ உரத்தினை இறக்குமதி செய்ய அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.
9 இலட்சம் ஹெக்டேயருக்கு தேவையான திரவு உரத்திற்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நைட்ரஜன் மூலத்துடன் கூடிய 3.1 மில்லியன் லீட்டர் விஷேட திரவ உரத்தை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் அதன் முதல் தொகுதியாக 1 இலட்சம் லீட்டர் விஷேட திரவ உரம் கடந்த 19 ஆம் திகதி இரவு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் 145,152 லீட்டர் நெனோ நைட்ரஜன் மூலத்துடன் கூடிய விஷேட திரவ உரம் இன்று (04) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
பெரும்போக வேளாண்மைச் செய்கைக்குத் தேவையான சேதனப் பசளையை விரைவில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் என்று விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித்த கே.ஜயசிங்க கடந்த மாதம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.