ஐக்கிய மக்கள் சக்தியினால் 16ம் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு பெரும்பாலான நீதிமன்றங்கள் தடை விதிக்காத நிலையிலும் பொலிஸ் மா அதிபர், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பொலிஸாரை பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தை தடுத்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார நேற்று (17) நாடாளுமன்றில் குற்றஞ்சாாட்டினார்.
மக்களின் ஆர்ப்பாட்டத்தை பொலிஸாரைக் கொண்டு தடுக்கமுடியாது என்று இதன்போது எச்சரித்த அவர்; அரசாங்கத்தில் இருந்து 40 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதிகமானோர் வெளியேறத் தயாராகி வருகின்றனர் எனக் கூறினார்.
இந்த நிலையில் அரசாங்கத்தை காப்பாற்ற எவரும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
05 வருடங்களுக்கு இந்த அரசாங்கத்தை ஆட்சி செய்ய விடப்போவதில்லை என்றும் ரஞ்சித் மத்தும பண்டார இதன்போது எச்சாித்தார்.
அமைச்சர் பசில் ராஜபக்சவும், மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்பராலும் நாட்டில் மீதியாக இருப்பதையும் இல்லாது செய்துவிடுவர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவுகளைக் புறக்கணித்து பொலிஸ் மா அதிபர், நாடாளுமன்ற வரப்பிரசாதத்தை மீறியதாகக் கூறி, நாடாளுமன்றத்தில் இன்று எதிா்க்கட்சியினர் கோசங்களை எழுப்பினர்.
இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுலோகங்களை ஏந்தி ஜனாதிபதிக்கும், அரசாங்கத்துக்கும், அமைச்சர் சரத் வீரசேகரவுக்கும் எதிராகக் கோசமிட்டனர்.