Our Feeds


Thursday, November 11, 2021

SHAHNI RAMEES

பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் உள்ளிட்ட 4 பேருக்கு பிணை


அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் உள்ளிட்ட 4 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது கொழும்பு நீதிவான நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 3 ஆம் திகதி நாடாளுமன்ற நுழைவாயில் வீதியில் இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கையின்போது, மஹரகம பொலிஸ்  பொறுப்பதிகாரிக்கு காயம் ஏற்படுத்தியமை, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ், அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »