Our Feeds


Friday, November 19, 2021

Anonymous

விவசாயிகளின் ஒரு வருட போராட்டத்திற்கு வெற்றி - 3 சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக இந்தியப் பிரதமர் அறிவிப்பு

 



மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார்.


பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ”2014ம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு சேவை செய்வதையே நோக்கமாக கொண்டுள்ளோம்.

விவசாயிகளின் வேதனையை நேரடியாக அறிவேன். நாட்டின் விவசாயிகளில் 80% பேர் சிறு விவசாயிகளாக உள்ளனர். விவசாயிகளுக்காக இந்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பயிர் சேதத்திற்காக விவசாயிகளுக்கு 1 இலட்சம் கோடி ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் திட்டங்களால் வேளாண் பொருட்களின் உற்பத்தி பல மடங்கு உயர்ந்துள்ளது. விவசாயிகளின் நலனுக்காக 3 வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த சட்டங்கள் சிறு விவசாயிகளை வலுப்படுத்தும். விவசாய சட்டங்களுக்கு ஆதரவளித்த விவசாயிகளுக்கு நன்றி. 3 வேளாண் சட்டங்களும் நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 3 வேளாண் சட்டங்களும் திரும்ப பெறப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »