மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, தனது மூன்று மகள்களைக் கொன்ற 35 வயது நபருக்கு மரண தண்டனை விதித்து உத்தரப்பிரதேசத்தின் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி இரவு, தனது வீட்டிலிருந்த மகள்கள் அஞ்சனி (11), ரட்டோ (7), புட்டோ (4) ஆகியோரை, அவரது தந்தை சிதாமி என்கிற சித்து கொலை செய்தார்.
இந்தக் கொலையில் ஈடுபட்ட சித்துவுக்கு மரண தண்டனை விதித்தும், 1 இலட்சம் ரூபா (இந்திய மதிப்பில்) அபராதம் விதித்தும், வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
மனைவி தனது பெற்றோர் வீட்டில் இருந்த நிலையில், குடிபோதையில் வீட்டுக்கு வந்த சித்து, குழந்தைகள் மூவரும் உறங்கிக் கொண்டிருந்த போது, வீட்டிலிருந்த எரிவாயு உருளையைத் திறந்துவிட்டு வீட்டுக்குத் தீவைத்துள்ளார். இந்தச் சம்பவத்தில் வீட்டில் இருந்த குழந்தைகளும் தீயில் கருகி பரிதாபமாக பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.