மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவமொன்று கரவெட்டி வடக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று(05) இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் துன்னாலை ஆண்டாள் வளவு பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.