கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களில் ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள சடலங்களின் எண்ணிக்கை 3,206 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களது சடலங்கள் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் உள்ள ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் நேற்று (12) மேலும் நால்வரின் சடலங்கள் அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து, அங்கு இதுவரை அடக்கம் செய்யப்பட்டுள்ள கொரோனா சடலங்களின் எண்ணிக்கை 3,206 ஆக அதிகரித்துள்ளது.