பிரிட்டனுக்கு படகில் செல்ல முயன்ற 31 பேர் ஆங்கிலக் கால்வாயில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அவர்களின் படகு பிரான்ஸுக்கு அருகில் புதன்கிழமை (24) மூழ்கியதால் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இப்படகில் 34 பேர் இருந்தனர் என நம்பப்படுவதாக பிரான்ஸின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டேர்மானின் தெரிவித்துள்ளார். 31 பேரின் சடலங்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 5 பெண்கள், ஒரு சிறுமியும் அடங்கியுள்ளனர். அதேவேளை இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மற்றொருவரை காணவில்லை.