மழையுடன் கூடிய வானிலை காரணமாக நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஷிரந்தி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் 30 டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர். அதிலும் மேல் மாகாணத்திலேயே அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இது மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் 68% ஆகும்.
மேலும், கண்டி, காலி, மாத்தறை, குருநாகல், பதுளை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலும் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக கொவிட் தொற்றுடன் டெங்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாத போதிலும், டெங்கு கட்டுப்பாட்டு வேலைத் திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு முன், பாடசாலை சூழலை சுத்தம் செய்யுமாறு சுகாதார அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் ஷிரந்தி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, டெங்கு நோயால் இவ்வருடம் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், இந்த வருடத்தில் இதுவரை 21,646 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)