08ம் திகதி வீட்டிலிருந்து வெளியேறிய கொழும்பு, வாழைத்தோட்டத்தை சேர்ந்த 3 சிறுமிகளும் கொழும்பின் சில இடங்களில் சுற்றி விட்டு அனுராதபுரம் வரை சென்று மீண்டும் கொழும்புக்கு வந்துள்ளனர்.
கொழும்பை வந்தடைந்த குறித்த 3 பெண் பிள்ளைகளும் ஓர் வீட்டில் மறைந்திருந்துள்ளனர் என இதுவரை கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே வேலை குறித்த 3 பிள்ளைகளும் பெரிய கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கும் வீடியோ காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளன.
3 பெண் பிள்ளைகள் தொடர்பில் முழுமையான விசாரனைகளை பொலிசார் முன்னெடுப்பதாக நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.
03 பெண் பிள்ளைகளும் வீட்டை விட்டு வெளியேறிச் செல்லும் காட்சி