( எம்.எப்.எம்.பஸீர்)
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மனுதாரர் தரப்பு சாட்சி விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளன. இன்று (19) 4 ஆம் நாளாக முறைப்பாட்டாளர் தரப்பு சாட்சியங்கள் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரண ராஜா முன்னிலையில் நெறிப்படுத்தப்பட்டு நிறைவு செய்யப்பட்டன.
இதனையடுத்து பிரதிவாதி தரப்பு சாட்சி விசாரணை இன்றி, பிரதிவாதியை விடுதலை செய்யுமாறு அசாத் சாலி சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன கோரிக்கை விடுத்தார்.
பிரதிவாதி தரப்பு சாட்சி விசாரணை இன்றி, பிரதிவாதியை விடுதலை செய்வதா, இல்லையா என்பது தொடர்பில் எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி தீர்ப்பளிப்பதாக இதன்போது கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா அறிவித்து அன்றைய தினத்துக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.