கொவிட் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி சடுதியாக குறைவடைந்து வருகின்றது என ஓளடத உற்பத்திகள், விநியோகம் மற்றும் ஒழுங்குப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன்ன தெரிவிக்கின்றார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், நாட்டில் தற்போது கொவிட் பரவல் மேலும் பரவுவதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக அவர் அச்சம் வெளியிடுகின்றார்.
குறிப்பாக நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்திலிருந்து டிசம்பர் மாதம் இறுதி வரையான காலப் பகுதியில் நாட்டில் மழையுடனான வானிலை நிலவும் என அவர் கூறுகின்றார்.
இந்த காலப் பகுதியில் தடிமன் உடனான நோய் பரவல் வழமையாகவே காணப்படும் என கூறும் அவர், எதிர்வரும் 5 அல்லது 6 வாரங்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றார்.