குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் 272 வெற்றிடங்கள் நிலவுவதாக அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் அண்மையில் நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தில் சிரேஷ்ட மட்டத்தில் 18, மூன்றாம் நிலையில் 113, இரண்டாம் நிலையில் 121, முதல் நிலையில் 19, வேறு பதவியில் ஒரு வெற்றிடமும் நிலவுவதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த வெற்றிடங்களால் திணைக்களத்தின் செயற்பாடுகளை வினைத்திறனாக முன்னெடுப்பதில் இடையூறுகள் ஏற்பட்டிருப்பதாகவும் அத்திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.