டி20 உலகக் கிண்ணத் தொடரில் இன்று இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணியை எதிர்த்தாடிய இங்கிலாந்து அணி 26 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட இங்கிலாந்து அணிக்கு அழைப்பு விடுத்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இங்கிலாந்து அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ஜோஸ் பட்லர் 101 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். இயன் மோகன் 40 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
பந்துவீச்சில் வணிந்து அசரங்க 3 விக்கெட்டுகளை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.
அதன்படி, வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 137 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டார்.
இலங்கை அணி சார்பில் வனிந்து ஹசரங்க 34 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
பானுக்க ராஜபக்ஷ மற்றும் தசுன் சானக ஆகிய இருவரும் தலா 26 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் மொய்ன் அலி, ஆதில் ரஷீத்,கிரிஸ் ஜோர்தன் ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.