Our Feeds


Sunday, November 7, 2021

SHAHNI RAMEES

உலகளவில் 25 கோடி பேரை தாக்கிய கொரோனா!

 

உலகளவில் கடந்த ஆண்டிலிருந்து இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 25 கோடியாக (250,253,524) அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசுகள் செயல்பட்டு வந்தாலும் நோய் பரவலின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 25 கோடியாக அதிகரித்திருக்கிறது.

தொற்று பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் கொரோனாவால் 4.73 கோடி பேர் பாதித்திருப்பதாகவும் 7.75 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 3.43 கோடி பேர் கொரோனாவால் பாதிப்படைந்திருக்கிறார்கள். 4.60 லட்சம் பேர் நோயின் தீவிரத்தில் பலியாகியிருக்கிறார்கள்.

அதற்கு அடுத்தடுத்த இடங்களில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளாக பிரேசில் - 2 கோடி , இங்கிலாந்து – 92 லட்சம், ரஷ்யா – 87 லட்சம், துருக்கி – 82 லட்சம், பிரான்ஸ் -72 லட்சம், அர்ஜென்டினா- 52 லட்சம், ஈரான்- 59 லட்சம், கொலம்பியா – 50 லட்சம் பேர் என்கிற எண்ணிக்கையில் இருக்கிறது.

பலியானவர்களின் எண்ணிக்கை – பிரேசில் (609,417) இந்தியா (460,787), மெக்ஸிகோ (289,413), பெரு (200,373), ரஷ்யா (245,635), இந்தோனேசியா (143,433), இங்கிலாந்து (141,743) இத்தாலி (132,164), கொலம்பியா (127,451), பிரான்ஸ் (118,820) ஈரான் (127,875), அர்ஜென்டினா (116,986).

உலகளவில் தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 50 லட்சமாக உயர்ந்திருக்கிறது. தொற்றிலிருந்து மீண்டவர்கள் 22 கோடி பேர்.

மேலும் உலகம் முழுவதும் நோயின் தாக்கத்தை குறைக்க இதுவரை 718 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »